விக்கிலீக்ஸ் பிரதானி விடுதலை!

விக்கிலீக்ஸ் நிறுவுனர் Julian Assange (52) இங்கிலாந்து சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகியுள்ள நிலையில், அவர் விரைவில் ஆஸ்திரேலியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டு அவர் இன்று விடுதலையாகியுள்ளார்.

விடுதலையை விக்கிலீக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர் இங்கிலாந்தைவிட்டு வெளியேறிவிட்டார் எனவும் அறிவித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாக பிரிட்டன் சிறையில் இருந்த Julian Assange , அமெரிக்காவுக்கு நாடு கடத்தாமல் இருப்பதற்காக சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பான ஆவணங்களை விக்கிலீக்ஸ் ஊடாக கசியவிட்டிருந்தார். தேசிய பாதுகாப்பு ஆவணங்களை அவர் வெளியிட்டது சதி நடவடிக்கை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்நிலையில் பிரிட்டனில் சிறை தண்டனை அனுபவித்தவிட்டதால், அமெரிக்காவில் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டியதில்லை என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம், Julian Assange விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles