கிராதுருகொட்ட – திவுல்பலஸ்ஸ பிரதான வீதியின் விரனகம பகுதியில் நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 கட்டை விரணகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் கொழும்பு பகுதியில் பணிபுரிபவர்கள் எனவும், விடுமுறைக்காக வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் சென்று கொண்டு இருக்கையில் குறித்த நபர் தூக்கத்தில் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதி அருகே மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் கிராதுருகோட்டா ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த ஆகியோரின் பணிப்புரை யின் பேரில் கிராந்துருக்கொட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்










