காலி, மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பகுதியில் இன்று (30) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
தனியார் பஸ்ஸொன்றும், மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு வெளிநாட்டவர்களே விபத்தில் பலியாகியுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










