கம்பளை, கண்டி வீதியில் குருதெனிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரொன்றும், மோட்டார் சைக்கிள்மீது மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 58 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை தவுலகல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.










