விபத்தில் மாணவி பலி: முல்லைத்தீவில் சோகம்!

முல்லைத்தீவு, கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவிமீது பட்டா ரக வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (21) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 8 வயதான மாதீஸ்வரன் நர்மதா என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

குறித்த மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த, பணிஷ் விற்கும் வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிவிட்டு திரும்பி சென்றபோது, கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டாரக வாகனம் அவர்மீது மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய சாரதி கடந்த இரண்டு வருடத்திற்கு முன் கொக்குதொடுவாய் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி அதில் ஒருவர் உயிரிழந்திருந்ததாகவும் இன்றும் அதே சாரதியே குறித்த விபத்தினை ஏற்படுதியிருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles