விபத்தில் முதியவர் பலி! தெய்வாதீனமாக உயிர் தப்பிய கர்ப்பிணி பெண் (படங்கள்)

புஸல்லாவை, வகுவப்பிட்டிய சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

திஸாநாயக்க முதியன்சலாகே ரூபானந்த (வயது – 70) என்வரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா, ருவான்புரவில் இருந்து , கண்டி நோக்கி சென்ற ஆட்டோவொன்று, வகுவப்பிட்டிய பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆட்டோவில் பயணித்த கர்ப்பிணி பெண் தெய்வாதீனமாக காயங்களின்றி உயிர் தப்பினர். அவர் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மாமாவே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நிருபர் – பா. திருஞானம்

Related Articles

Latest Articles