விபத்தில் 12 பேர் காயம்!

கந்தகெட்டிய பொபிட்டிய வீதியில் இன்று (17) காலை தனியார் பேருந்து ஒன்றும் ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் சென்ற வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கந்தகெட்டிய பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 7 பேர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கந்தகெட்டிய வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த வீதியில் இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்கள் வெவெதென்ன மற்றும் போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ராமு தனராஜா

Related Articles

Latest Articles