சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய சிறுவன் பலியாகியுள்ளார்.
ஏ.எம்.பாஸீர் எனும் 12 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
பல்கலைக்கழக பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து , மறு பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த குறித்த சிறுவனை, சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறை நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் மோதியலில் சம்பள இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










