விமல் தனிவழி!

அரசிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்படும் 10 கட்சிகள் இணைந்து எதிர்காலத்தில் கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் இந்தக் கூட்டணியில் சுயேச்சை கட்சிகள் போட்டியிடும் என்றும் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற சுயேச்சைக்குழுவினரின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய உதய கம்மன்பில, புதிய கூட்டணியின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தமது கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Related Articles

Latest Articles