விமல் தலைமையில் புதிய கூட்டணி?

ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் அரசியலுக்கு தற்காலிகமாக விடைகொடுத்திருந்த விமல் வீரவன்ச, புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு முயற்சித்துவருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன எனவும், தேசிய சுதந்திர முன்னணி தலைமையிலேயே கூட்டணி அமையவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

தேசிய வாதிகள் மற்றும் இடதுசாரி தலைவர்களை கூட்டணிக்குள் உள்வாங்குவதற்கும், ‘இலங்கையர்கள்” என்ற கொள்கையுடன் கூட்டணி பயணத்தை தொடர்வதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles