ஜனாதிபதி புடின் விரைவில் இந்தியா விஜயம் செய்யவுள்ளார் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தபோது இந்தியாவுக்கு வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை புடின் ஏற்றுக்கொண்டார். அதன்படி அவரது இந்திய சுற்றுப்பயணம் குறித்து ரஷ்யா இன்று அறிவித்தது.
‘ புடினின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்தார். இப்போது எங்கள் தரப்பில் பயணம் மேற்கொள்ள உள்ளோம்.” எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும், திகதி விபரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.