விரைவில் டில்லி பறக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவொன்று விரைவில் டில்லி செல்லவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்திய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இவ்விஜயம் அமையவுள்ளதென தெரியவருகின்றது.

அரசியல் தீர்வு திட்ட விடயத்தில் இந்திய தலையீடு அவசியம் என வலியுறுத்திவரும் கூட்டமைப்பு, இதற்கு முன்னரும் டில்லி செல்ல முற்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றன. எனினும் பயணம் பிற்போடப்பட்டது.

இந்நிலையிலேயே தற்போது டில்லி செல்வதற்கு கூட்டமைப்பு தயாராகிவருகின்றது என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles