விரைவில் மாகாண சபைத் தேர்தல்! 9 ஆம் திகதி பிரச்சாரம் ஆரம்பம்!!

வெகு விரைவில் தேர்தலொன்றுக்கு செல்வதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது – என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தமது கட்சி தயாரெனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களை நடத்துவதற்கு இன்னும் காலம் உள்ளது.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்கள் இருப்பினலும், விரைவில் நடத்தப்படும் தேர்தலாக அதுவே அமையும்.

இம்மாதம் 9 ஆம் திகதி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரச்சாரம் அநுராதபுரத்தில் ஆரம்பமாகும் எனவும் பஸில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles