விளம்பர பலகை சரிந்து வீழ்ந்ததில் 14பேர் பலி: 75 பேர் காயம்

இந்தியாவின் மும்பை நகரில் விளம்பர பலகையொன்று சரிந்து வீழ்ந்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட புயல் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

70 மீட்டர் நீளமும் 50 மீட்டர் அகலமும் கொண்ட குறித்த விளம்பர பலகை, வீடுகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது சரிந்து வீழ்ந்துள்ளதுடன் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles