விளையாட்டுதுறை அமைச்சர் இன்று விசேட அறிவிப்பு

” என்னால் நியமிக்கப்பட்ட புதிய கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை நீக்குமாறும், அவ்வாறு இல்லாவிட்டால் விளையாட்டு சட்டத்தை தனக்குகீழ் கொண்டுவருவதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார்.” – இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,

” ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. முறைப்பாடுகள் செய்தாலும் விசாரணைகள் இல்லை. இந்நிலையிலேயே புதிய இடைக்கால நிர்வாக சபையை அமைத்தேன். அமைச்சரவையிலும் இது பற்றி பேசப்பட்டது. தனிப்பட்ட ரீதியிலும் ஜனாதிபதி கதைத்தார். என்னால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவை நீக்குமாறு கூறினார். அவ்வாறு இல்லையேல் விளையாட்டு சட்டம் ஜனாதிபதியின்கீழ் கொண்டுவரப்படும் எனக் குறிப்பிட்டார்.

விளையாட்டு சட்டத்தை அல்ல என்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்கிவிட்டு முடிவை எடுங்கள் என நான் கூறினேன். தற்காலிக தெரிவுக்குழுவை நீக்கமாட்டேன் எனவும் எடுத்துரைத்தேன். நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மதிக்கின்றோம். ஆனால் மறுபடியும் மோசடிகாரர்கள்தான் அங்கு செல்லவுள்ளனர். கிரிக்கெட் தொடர்பில் நாளை (இன்று) விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளேன். – என்றார்.

Related Articles

Latest Articles