ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக செயற்படும் ரொஷான் ரணசிங்கவிடம் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சு பறிக்கப்படவுள்ளது .
பாதீட்டு கூட்டத்தொடரின் பின்னர் ஜனவரி முற்பகுதி அளவில் இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது எனவும், அவ்வாறு பறிக்கப்படும் விளையாட்டுத்துறை அமைச்சு விடயதானம் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளது.
எஸ்.பி. திஸாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை வகித்துள்ளார். அவரது காலத்திலேயே விளையாட்டுத்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏனைய இரு அமைச்சு பதவிகளிலும் ரொஷான் ரணசிங்க தொடர்வார், எனினும், விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை பறித்தால், அவர் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.