விஷமிகளால் மீண்டும் உடைக்கப்பட்ட ‘அணையா விளக்கு’ நினைவுத் தூபி!

 

‘யாழ்ப்பாணம் வரவேற்கின்றது’ என்ற வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘அணையா விளக்கு’ போராட்ட நினைவுத் தூபி இனந்தெரியாத விஷமிகளால் நேற்று மீண்டும் உடைக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்களுக்குச் சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணிப் பகுதியில் ‘அணையா விளக்கு’ போராட்டம் ‘மக்கள் செயல்’ எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தின் நினைவாக அந்த இடத்தில் ‘அணையா விளக்கு’ தூபி அமைக்கப்பட்டது.

இந்த ‘அணையா விளக்கு’ தூபி கடந்த ஒக்டோபர் மாதமும் அடித்து உடைக்கப்பட்டது. உடனடியாக இந்தத் தூபி மீண்டும் புனரமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் ‘அணையா விளக்கு’ போராட்ட நினைவுத் தூபி விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles