தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியில் வீடு சின்னத்தில் போட்டியிடப்போவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.
இன்று கிழக்கு மாகாணத்தில் களுவாஞ்சிக்குடியில் கூடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது அது சம்பந்தமான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் தேடுதலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தொடர்ந்தும் வீடு சின்னத்திலேயே போட்டியிட்டுவந்துள்ளதால் இம்முறையும் அதேசின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகவும் அதுதொடர்பில் இன்று நடைபெறும் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் உள்ளிட்ட கட்சிகள் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
