லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அடாவத்தைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் கம்பு , கத்தி, கோடரியுடன் நுழைந்த நால்வர் வீட்டினுள் இருந்த நபர் ஒருவர் மீது நேற்றிரவு கோடரியால் தாக்கியதாக லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான நபர் அயலவர்களின் உதவியுடன் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பதுளை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன் மிகவும் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை.
ராமு தனராஜா
