வரகாபொல – தும்மலியத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 50 வயதான நபர் ஒருவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக இந்த பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவில் காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.










