வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது

சட்ட விரோதமான முறையில் வெடி பொருட்களை தன்வசம் வைத்திருந்த 34 வயதான நபர் ஒருவரை கஹவத்தை விசேட அதிரடி படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து பலாங்கொடை தாமஹன பிரதேசத்தை சேர்ந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கட்டிட நிர்மாண நிறுவனமொன்றின் உரிமையாரான இவர் தனது பண் டகசாலையில் பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடமிருந்து ஜெனரேட்டர் 2, டெட் ட்டனேட்டர் 435, வெடிபொருட்கள் 1450, ஜெலட்நைட் குச்சிகள் 80 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பலாங்கொடை பொலீசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles