வென்றது இலங்கை: சாதனை படைத்தார் குசல் பெரேரா!

டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை குசல் பெரேரா படைத்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி தம்புள்ளையில் நேற்று நடைபெற்றது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரேஸ்வெல், ஜகாரி போல்க்ஸ் தலா 27 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.பின்னர் 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 140 ரன் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக கேப்டன் அசலங்க 35 ரன்களும், குசல் பெரேரா, கமிந்து மென்டிஸ் தலா 23 ரன்களும் அடித்தனர். குசல் பெரேரா இந்தப் போட்டியில் அடித்த 23 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 1904 ரன்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இலங்கை வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:

1. குசல் பெரேரா: 1904 ஓட்டங்கள்
2. திலகரத்ன டில்ஷான் – 1889 ஓட்டங்கள்
3. குசல் மெண்டிஸ்: 1840 ஓட்டங்கள்

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles