வெற்றியை தோனிக்கு சமர்ப்பிக்கின்றோம் – ஜடேஜா உருக்கம்

” இறுதிபந்தில் கிடைத்த ‘திகில்’ வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்.” என்று
ஜடேஜா தெரிவித்தார்.

ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இறுதி இரு பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் ஜடேஜா சிக்ஸர், போ ரன் என அதிரடி காட்டி சென்னை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.

வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட அவர் கூறியதாவது,

எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக ஐந்தாவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இது அற்புதமான உணர்வு. உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சர்யத்தை கொடுத்தது. தாமதமான இரவிலும் மழை நிற்கும்வரை ரசிகர்கள் காத்திருந்தனர்.

சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய வாழ்த்துக்களை சொல்ல வேண்டும். இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். கடைசி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் கடினமாக ஆட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். மோஹித் ஸ்லோ பால் அதிகம் வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். அப்படியே செய்தேன். இந்த வெற்றி தருணத்தில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். என்று கூறினார்.

Related Articles

Latest Articles