அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இரவு 10 மணி முதல் தேர்தல் பெறுபேறு வெளியாகும் என தெரியவருகின்றது.
முதலாவதாக தபால்மூல வாக்களிப்பு பெறுபேறு அறிவிக்கப்படும்.
நாடாளுமன்றத்துக்கு மக்கள் ஆணைமூலம் 196 உறுப்பினர்களும், தேசிய பட்டியல் ஊடாக 29 பேரும் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
196 ஆசனங்களுக்காக அரசியல் கட்சிகள் சார்பில் 5 ஆயிரத்து 6 வேட்பாளர்களும், சுயேச்சைக்குழுக்களில் 3 ஆயிரத்து 346 இருந்து வேட்பாளர்களுமாக மொத்தம் 8 ஆயிரத்து 352 பேர் போட்டியிட்டனர்.
பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் தகுதிபெற்றிருந்தனர்.
இன்று மாலை 4.30 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகவுள்ளது.