வெலிமடையில் விபத்து: சீன பிரஜை காயம்!

வெலிமடை, நுவரெலிய வீதியில் இன்று (07) காலை ஆட்டோவொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்;.
ஆட்டோவை ஓட்டிச்சென்ற 36 வயதுடைய சீன பிரஜையொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

காயமடைந்த குறித்த நபர் வெலிமடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பக்கம் இருந்து வந்த ஆட்டோ வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெலிமடை பக்கம் இருந்து நுவரெலியா பக்கம் சென்று கொண்டிருந்த லொறியில் வெலிமடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அபேவிக்கிரம தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles