தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
சம்பவம் செய்த சிறைச்சாலை ஆணையாளரை பதவி நீக்கி, அனுர சிறப்பான சம்பவம் செய்துள்ளார். பாராட்டுகள்!
இந்த “ஜனாதிபதி மன்னிப்பு” பட்டியலுக்கு புறம்பாக, கைதிகள் விடுவிக்க படுவது தொடர்பில் இரண்டு விஷயங்கள் உள்ளன.
1)
இந்த தனியொரு ஆணையாளரால் மாத்திரம் செய்ய கூடிய சம்பவம் அல்ல. இதற்கு பின் நிச்சயமாக பலர் உள்ளார்கள்.
தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அடையாளம் காண பட்டு, விசாரணை, குற்ற பத்திரிக்கை, வழக்கு, சிறை தண்டனை எனற பாதையில் பயணிக்க வைக்க பட வேண்டும்.
2)
இது நிச்சயமாக முதல் சம்பவமாக இருக்க முடியாது.
இதற்கு முன்னைய ஆட்சி காலங்களிலும், நடந்த இத்தகைய “விடுவிப்பு” சம்பவ வரலாறுகள் தோண்டி எடுக்க பட்டு சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.