வெளிநாடுகளில் தொழில் புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பும் போது முறையான வழிமுறைகளை பின்பற்றி அனுப்பி வைக்குமாறு மத்திய வங்கி மீண்டும் அறிவித்துள்ளது.
முறைசாரா வழிகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு எதிரான சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் மோசடிகாரர்களின் ஏமாற்று நடவடிக்கைகளுக்கு ஆளாகி விட வேண்டாம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
