வெள்ளத்துடன் வந்த முதலைகளால் மக்கள் அச்சம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வீழ்ச்சி கடந்த இரு தினங்காளாக ஓய்ந்துள்ளது. எனினும் வீதிகளிலும், கிராமங்களிலும்
வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளது.

மழை ஓய்ந்துள்ள இந்த நிலையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றுஅந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வெல்லாவெளி, கோவில் போரதீவு, பெரிய போர தீவு, உள்ளிட்ட பல பகுதிகளில்அண்மித்துள்ள குளங்களில் முதலைகள் நடமாடித் திரிகின்றன.

குளக்கரை ஓரங்களில் மேய்ச் சலுக்குச் செல்லும் ஆடு, மாடுஉள்ளிட்ட கால்நடைகளையும்முதலைகள் வேட்டையாடி வருகின்றன. அந்தப் பகுதிக்குச் செல்லும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அந்தப்பகுதி விவசாய அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மட்டக்களப்பு வாவியிலிருந்து கிராமங்களை அண்மித்துள்ள சிறிய குளங்களுக்கு இந்த முதலைகள் வந்துள்ளன என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles