வெள்ளநீர் பெருக்கெடுப்பு – 20 வீடுகள் பாதிப்பு!

மலைநாட்டில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் அடை மழையால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துவருகின்றது. சில இடங்களில் மண்சரிவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  வெள்ள பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
 
ஹட்டன் ரொத்தஸ் தோட்டத்தின் ஊடாக பாயும் களனி ஆற்றின் கிளையாறு பெருக்கெடுத்ததன் காரணமாக ஹட்டன் ரொத்தஸ் தோட்டத்தின் 20 வீடுகளினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
 
இதன் காரணமாக வீட்டு பொருட்கள், உணவு பொருடகள், ஆவணங்கள், பாடசாலை மாணவர்களின் பாடநூல்கள், கால்நடைகள் என அணைத்தும் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.
சில வீடுகளின் கூரைகள் உடைந்து வீடுகள் தொடர்ந்து மழை நீரில் நனைந்த நிலையில் காணப்படுகின்றது.
 
தற்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட 20 குடும்பம்பங்களும் பாதிக்கப்பட வீடுகளின் ஒரு பகுதியிலும் அயலவர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இதில் சில வீடுகள் தொடர்ந்து ஈரலிப்புடன் காணப்படுவதால் அவற்றில் தங்க முடியாது உள்ளமை காரணமாக அவர்கள் மாற்று இடங்களை எதிர்பார்த்துள்ளனர்.
இவர்கள் வளர்த்த கால்நடைகளின் கொட்டில்களும் பாதிக்கப்ட்டுள்ளதால் அவற்றை பராமரிப்பதிலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
வயதான தமக்கு தமது வாழவாதாரமான இந்த கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது என்ற இவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறானதொரு வெள்ளத்தினால் தமது பிள்ளையை பறிக்கொடுத்த தாய் தாம் தொடர்ந்தும் இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்க்பபடுவதாகவும் தம்மை யாரும் கண்டுக்கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் வாக்கு வாங்குவதற்கு மட்டுமே தம்மை தேடி வருவதாகவும் இவ்வாறான நேரத்தில் தமமை யாரும் பார்க்க வருவதில்லை என்றும் தெரிவித்தார்.

கேட்பாரற்று நிர்கதியாகியுள்ள இந்த மக்கள் தமது நிலையை யாரிடம் முறையிடுவது யார் தமக்கு உதவி செய்வார்கள் என்ற தெரியாது மிகவும் மன வேதனையுடன் வாழ்கின்றனர்.
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles