வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்

வெள்ளவத்தை மெரின் டிரைவ் கடற்கரைப் பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளையே முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles