பதுளை மாவட்டத்தின் ரிதிமாலியத்தை பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், அப்பகுதியின் கெமுனுபுர ஆடை த் தொழிற்சாலையை உடன்மூடிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் சுகாதார சேவை பிரதான வைத்திய அதிகாரி அமில கிரிசாவிதான, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இன்று 05-02-2021 முதல் அமுலாகும்படி, இவ்கெமுனுபுர ஆடைத்தொழிற்சாலையை மூடிவிட, விடுக்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கெமுனுபுர ஆடைத் தொழிற்சாலையில், ஆரம்பத்தில் ஓரிருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து படிப்படியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 05-02-2021இல்176 பேராகியது. இவ் அதிகரிப்பையடுத்தே, இவ்ஆடைத் தொழிற்சாலை உடன் மூடப்பட்டது.
2500 பேர் இவ் ஆடைத்தொழிற்சாலையில் தொழில்செய்து வருகின்றனர். கடந்த03-02-2021இல் 324பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி. ஆர். பரிசோதனையில் 113பேருக்கும், 200 பேருக்கு மேற்கொள்ளப்ப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் 63பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது, இன்று 05-02-2021இல் வெளியான பரிசோதனை அறிக்கையில் ஊர்ஜிதமாகியுள்ளது.
எம். செல்வராஜா, பதுளை
