வேற்று கிரகத்தில் புழுதிப்புயல்

எமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள கிரகம் ஒன்றில் முதல் முறையாக கொந்தளிக்கும் புழுதிப்புயல் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து சுமார் 40 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் வி.எச்.எஸ் 1256பி என்ற வேற்றுக் கிரகத்திலேயே இது அவதானிக்கப்பட்டுள்ளது. புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலமே இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிலிக்கன் மற்றும் ஒட்சிசனை உள்ளடக்கிய துகள்களான சிலிக்கேட்டு துகள்களைக் கொண்டதாக இந்தப் புழுதிப்புயல் உள்ளது.

எனினும் இது பூமியின் பாலைவனங்கள் மற்றும் வறண்ட நிலங்களில் ஏற்படும் புழுதிப்புயலை ஒத்ததாக அமையாது என்பதோடு அதிக பாறைகளைக் கொண்டதாக இருக்கும்.

வி.எச்.எஸ் 1256பி கிரகம் 2015 ஆம் ஆண்டு சிலியில் உள்ள விஸ்டா தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது எமது சூரியக் குடும்பத்தில் வியாழன் போன்ற ஒரு வாயுக் கிரகம் என்பதோடு வியாழனை விடவும் 12 தொடக்கம் 18 மடங்கு பெரிதாகும்.

Related Articles

Latest Articles