கண்டி தேசிய வைத்தியசாலை வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலிருந்து எரிபொருளைத் திருடிய ஒருவர் வைத்தியசாலை காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடியால் குறித்த வைத்தியர் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு வருவதுடன் அன்றும் வழமை போல 28ஆம் இலக்க வார்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வைத்தியசாலைக்குள் சென்றுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் போத்தல்ஒன்றில் மோட்டார் சைக்கிளிலிருந்த எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த போது, வைத்தியசாலை காவலர்களிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
சந்தேகநபர் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறான எரிபொருள் திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.










