ஷேன் வோர்ன் மாரடைப்பால் காலமானார்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழல் பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வோர்ன் இன்று காலமானார்.

தாய்லாந்தில் உள்ள அவரது பங்களாவில் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52.

ஷேன் வோர்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 708- விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட அவர் , 2007- ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். ஷேன் வோர்னின் திடீர் மரணம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles