இந்தியாவின் அயோத்தி நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி ஸ்ரீ கோவிந்த தேவ் கிரிஜி மஹாராஜ் அவர்கள், இன்றைய தினம் 24.04.2024 வரலாற்று முக்கியத்துவம்; வாய்ந்த ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தந்த சுவாமியை ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.
இதனை தொடர்ந்து நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி மாணவர்கள் கலாச்சார இசை நடன நிகழ்வும் மங்கள வாத்தியம் முழங்கவும் ஆலய பரிபாலன சபையினரால் ஊர்வலமாக ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சுவாமி வருகையை நினைவு கூரும் முகமாக நினைவு கல்வெட்டு ஒன்றை திரை நீக்கம் செய்துவைத்ததுடன் விசேட பூஜைகளை தலைமையேற்று நடாத்தினார்..
இதன்போது வருகை தந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கியதுடன் சுவாமிக்கு ஆலய நிர்வாக சபையினரால் நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எஸ்போட் விருந்தகத்தில் ஆலய நிர்வாக சபையினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.










