ஹட்டனில் சட்டவிரோத சுற்றுலா ஹோட்டல்கள் பயணிகள் அசௌகரியம்

ஹட்டன், டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித பதிவுகளும் அனுமதிகளும் இன்றி, சுற்றுலா ஹோட்டல்கள் நடத்திச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்திலுள்ள சில வீடுகளில் சுற்றுலாப்பயணிகள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கான உணவு விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பொறுப்பை ஏற்பதற்கு எவரும் முன்வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே எவ்வித அனுமதியும் இன்றி நடத்திச் செல்லப்படும் சுற்றுலா விடுதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையொன்றை முன்வைக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக டிக்கோயா நகர சபையின் தவிசாளர் சடையன் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles