கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் ஹட்டன் நகரில் ஐந்து மீன் கடைகள் இன்று (23) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடப்பட்டுள்ளன என்று ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ராமையா பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
ஹட்டன் – டிக்கோயா நகரசபை தலைவரின் அறிவுறுத்தக்கமையவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹட்டன் பிரதான மீன் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இருவர், பேலியகொட மொத்த மீன் விற்பனை நிலையத்தில் மீன் கொள்வனவு செய்துவந்துள்ளனர். இந்நிலையில் மக்களின் பாதுகாப்புகருதி மேற்படி கடைகளை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு சென்று வந்த இருவரை கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பதாகவே தனிமைப்படுத்தப்பட்டதாகவும், ஏனைய மீன் கடைகளில் பணிபுரியும் 12 பேர் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கொழும்பு சென்று வந்த இருவருக்கு இன்று (23) திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை வந்த பின் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
க.கிசாந்தன்