ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் லொறி ஒன்று தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து, இன்று (20.10.2026) அதிகாலை ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில், மயானத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் தொலைத்தொடர்பு கம்பம் மற்றும் அதன் கம்பி இணைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணம் என ஹட்டன் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










