ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில், லொறி ஒன்றும் ஜீப் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று 16.10.2026 காலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், லொறியில் பயணித்த ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த லொறியும், ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வாகனமுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
ஜீப் வாகனம் தனக்கு முன்னால் வந்துகொண்டிருந்த கார் ஒன்றிற்கு இடமளிக்க முற்பட்டபோது, எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










