மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியால் நிறைவேற்றப்பட்டுள்ள ஹட்டன் பிரகடனத்தை மக்கள் மயப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன் அடுத்த மக்கள் சபைக்கூட்டம் நாளை (21) பிற்பகல் 2 மணிக்கு, பலாங்கொடை, ஒலுகங்தொட்ட சந்தரு விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப், தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஆரியதாச ஆகியோரின் பங்கேற்புடன் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

