ஹப்புத்தளை பகுதியில் தனது வீட்டில் புதையல் தோண்டிய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பிராந்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை பிராந்திய பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், புகையிரத வீதி ஹப்புத்தளை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட 02 மண்வெட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள் மற:றும் பூசணிக்காய்கள், பூக்கள், கறுப்புத் துணிகள், சாம்பிராணி உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபானவின் ஆலோசனைக்கு அமைய , பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் அசோக, தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் பின்னர் சந்தேக நபரை, பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்










