ஹப்புத்தளையில் கொரோனாதொற்றாளரொருவர் கண்டுப்பிடிக்கப்பட்டதினால், அவருடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மீன் சந்தையில் தொழில் செய்த கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர், ஹப்புத்தளைக்குவந்து சென்றதையடுத்தே, அவருடன் தொடர்புகளைக் கொண்டிருந்த மூன்று குடும்பங்களைச் சார்ந்த 16 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
பேலியகொடைமீன் சந்தையில் தொழில் செய்தவர் பீ.சி. ஆர் பரிசீலனைக்குற்படுத்தியவேளையில்,அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே,அவர் ஹப்புத்தளைக்குவந்து, சென்றுள்ளார். அவர் தற்போது, கொழும்பு ஐ.டி. எய்ச் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.
ஹப்புத்தளையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 16 பேரையும்,பீ.சி.ஆர். பரிசீலனைக்குற்படுத்தவும், குறிப்பிடப்படும் பகுதியில் நோய்த்தொற்றுநீக்கி திரவங்களைத் தெளிக்கவும்,பொதுசுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, பொதுசுகாதாரப் பரிசோதகர் டி. சுதர்சன் தெரிவித்தார்.
எம்.செல்வராஜா, பதுளை