ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொலை!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் உயர் மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமது அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் புரட்சி படையும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இவரை யார் கொலை செய்தது என்பது தொடர்பான தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இஸ்ரேலின் வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரதானியின் மெய் பாதுகாவலரும் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது. 90 ஆயிரத்து 589க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையிலேயே ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார்.

ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இவரின் மரணத்தால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles