ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடம்

ஐபிஎல் 2024 சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. 10 அணிகளில் (லக்னோ, கொல்கத்தா) ஏறக்குறைய அனைத்து அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளன.

நேற்றைய மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி வரை, ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையும், குஜராத் மூன்றில் இரண்டில் வெற்றி பெற்று (ரன்ரேட்) 4-வது இடத்தையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மூன்றில் ஒரு வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

லக்னோ 2 போட்டியில் ஒன்றில் வெற்றி பெற்று ஆறாவது இடத்தையும் (ரன்ரோட்), டெல்லி கேப்பிட்டல்ஸ் மூன்றில் ஒரு வெற்றி மூலம் 7-வது இடத்தையும், பஞ்சாப் எட்டாவது இடத்தையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 இடத்தையும், மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன்.

இன்றைய போட்டியில் ஆர்.சி.பி.- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலபட்ச நடிகையின் நடத்துகின்றன. இதில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஐந்தாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. லக்னோ வெற்றி பெற்றால் 2-வது அல்லது 3-வது இடத்திற்கு முன்னேறும்.

Related Articles

Latest Articles