ஹாலிஎல, உனுகொல்ல வீதியில் இன்று (23) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹாலிஎலயிலிருந்து உனுகொல்ல பிரதேசத்திற்கு பால் சேகரிப்பதற்காக சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலிஎல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவான் குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்துப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா










