ஹிசாலினக்கு நீதி கோரி பெண்கள், சிறுவர்கள் பொகவந்தலாவையில் கவனயீர்ப்பு போராட்டம்.

– ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

ஜூட்குமார் ஹிசாலினிக்கு நிதி கோரி பொகவந்தலா கீழ் பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று (30) மேற்கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்களின் வீட்டு வேலைக்கு சென்று எரிகாயங்களுடன் மிகவும் மர்மமான முறையில் கடந்த 15 திகதி உயிரிழந்து சிறுமிக்கு நீதி கோரி நாடெங்கிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுகாதார பொறிமுறைக்கமைய கரப்பந்து விளையாட்டுத்திடலில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டகார்கள் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்போம்,உரிமைக்காக போராடுவோம்; மலையக சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே’ நீதிக்காக போராடுவோம் போன்ற பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவனயீர்ப்பு போராட்டக்காரர்கள் வேண்டும் வேண்டும் ஹிசாலினிக்கு நீதி வேண்டும், கைது செய் கைது செய் குற்றவாளியை கைது செய் விசாரணைகள் துரிமமாக்க வேண்டும்,தரகளை கைது செய்ய வேண்டும். போன்ற கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பொகவந்தலாவை கீழ் பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஒழுங்கு செய்திருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சுமார் 50 இற்கும் மேற்பட்ட பெண்கள் சிறுவர்கள்;,என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Paid Ad
Previous articleலிந்துலை பகுதியில் நேற்றிரவு விபத்து! பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரட்ன மரணம்!
Next articleநுவரெலியா மத்திய வங்கிக் கிளைக்குச் செல்லும் தொழிலாளர் எதிர்கொள்ளும் அசௌகரியம்