ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுவிப்பு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 21 மாதங்களாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சார்பில் முன்னதாக புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த உத்தரவை திருத்த கோரி, பிரதிவாதி சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நேற்றுமுன்தினம் (7) பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவல ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயம், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றுக்கு  உத்தரவிட்டது.

அதன்படி, புத்தளம் மேல் நீதிமன்றின் உத்தரவுக்கமைய,  இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles