ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவனைக் கைது செய்துள்ளதாக யாழ். வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை கிழக்குப் பகுதியிலுள்ள தனது வீட்டில் ஹெரோயினை பல்கலைக்கழக மாணவன் வைத்திருக்கிறார் என்று பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
அவரிடமிருந்து 750 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றியதாகவும், சந்தேகத்தில் 22 வயதான பல்கலைக்கழக மாணவனைக் கைது செய்ததாகவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.










