அக்கரபத்தனை பிரதேச சபையின் புதிய தலைவராக இராமன் கோபால் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் ,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் ஏ.பி சத்திவேல், உபதலைவர் சச்சிதானந்தன், அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்துக்கொண்டனர்.
