சனத் ஜயசூரியவின் சாதனைகளை முறியடித்த மத்தியூஸ் திமுத்

டெஸ்ட கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் அஞ்சலோ மத்தியூஸ் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை பின்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று ஆரம்பமான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 47 ஓட்டங்களை பெற்ற மத்தியூஸ் இந்த மைல்கல்லை எட்டினார்.

2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெற்ற 35 வயதான மத்தியூஸ் 101 போட்டிகளில் சரியாக 7000 ஓட்டங்களை பெற்று சனத் ஜனசூரிய 110 போட்டிகளில் பெற்ற 6973 என்ற சாதனையை முறியடித்தார்.

இதில் குமார் சங்கக்கார 12400 ஓட்டங்களுடன் முதலிடத்திலும் மஹேல ஜயவர்தன 11814 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதேநேரம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்னவும் சனத் ஜனசூரியவின் மற்றொரு சாதனையை முறியடித்தார். கருணாரத்ன நேற்று ஆரம்பமான டெஸ்டில் சரியாக 50 ஓட்டங்களை பெற்ற நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அதிகபட்சமாக 5980 ஓட்டங்களை பெற்றார்.

முன்னர் ஆரம்ப வீரராக 5932 ஓட்டங்களை பெற்றிருந்த சனத் ஜயசூரியவே இந்த சாதனையை படைத்திருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles